பொள்ளாட்சி போல் சென்னை தாம்பரத்தில் ஒரு 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்து உள்ள கௌரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், அந்த பகுதியில் செண்டிரிங் வேலை பார்த்து வருகிறார். 

இந்த கார்த்திக், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அந்த சிறுமியிடம் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், வீட்டு வேலை செய்யும் தனது தாயாரின் கவனிப்பிலேயே அந்த 17 வயது சிறுமி வளர்ந்து வந்திருக்கிறார். 

இப்படியான நிலையில், காதலன் கார்த்தியின் வலையில் விழுந்த அந்த சிறுமி, கார்த்திக்கின் ஆசை வார்த்தையை நம்பி அவரிடம் நெருக்கமாகவே பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

அதன் பிறகு, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய கார்த்திக், அந்த சிறுமியை பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், சிறுமிக்கு தெரியாமல் காதலன் கார்த்திக், அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும் மிக நெருக்கமான காட்சிகளைத் தனது செல்போனில் அவன் வீடியோவாக எடுத்துப் பதிவு செய்து வைத்துக்கொண்டான். 

அத்துடன், அந்த சிறுமியை குறித்து தனது நண்பரான பனங்காட்டு படைகட்சி கெளரிவாக்கம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் என்பவரிடம் கூறி இருக்கிறார். 

இதனால், நண்பன் மணிகண்டனுக்கும் அந்த சிறுமி மீது ஆசை வந்திருக்கிறது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து, கூட்டாக அந்த சிறுமியிடம் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி மிரட்டியே பல மாதங்களாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கார்த்திக், மணிகண்டன் இருவரும் சேர்ந்து மேலும் அவர்களுடைய கூட்டாளியான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் 40 வயதான திமுக தாம்பரம் சட்டமன்றத் தொகுதி சமூகவலைத்தள பொறுப்பாளரான தனசேகரையும் கூட்டு சேர்த்து, அந்த சிறுமியை அவருக்கு இறையாக்கி உள்ளனர்.

அதன் பிறகு, அந்த சிறுமியை மிரட்டி தனியாக வரவைத்து வாயில் மதுவை ஊற்றி, நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.

இப்படியான நிலையில், அந்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். இந்த விசயத்தை, சிறுமி அவர்களிடம் கூறியிருக்கிறர். இதனால், காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டிக் கருக்கலைப்பு செய்ததாகத் தெரிகிறது.

அதன் பிறகும், அவர்கள் 3 பேருமாகச் சேர்ந்து சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளது. இப்படியாக, தொடர்ந்து 3 பேருமாக அந்த சிறுமியை ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்ததால், அந்த சிறுமியால் ஒரு கட்டத்திற்கு மேல் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், ஒரு சமூக ஆர்வலர் ஒருவருடன் உதவியுடன், அவரது தாயார், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காதலன் கார்த்திக் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு, 2 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனசேகர் என்பவனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனிடையே, பொள்ளாச்சி போல் சென்னை தாம்பரத்தில் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக 3 பேர் சேர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.