மக்களை மகிழ்விக்கும் பல எண்டெர்டைன்மெண்ட் மீடியம்களில் முக்கியமான ஒன்று சின்னத்திரை.சினிமாவை தாண்டி அவரவர் வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளையும்,திரைப்படங்களையும்,தொடர்களையும் கொண்டுசேர்க்கும் சின்னத்திரைக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு.சின்னத்திரையில் பல நட்சத்திரங்களையும் உருவாகியுள்ளது.

சினிமாவிற்கு நிகராக சின்னத்திரை தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும் ரசிகர்கள் கொண்டாதான் செய்து வருகின்றனர்.அதில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.அப்படி சின்னத்திரையில் ஜொலித்து வரும் பல நட்சத்திரங்களை கௌரவப்படுத்தி பல விருதுகளும் வழங்கப்பட்டும் வருகின்றன.

மக்களால் கொண்டாடப்படும்,கொண்டாடப்பட்ட பல சீரியல் பிரபலங்களை கலாட்டா சார்பாக நக்ஷத்திரா விருதுகள் வழங்கி கௌவவித்துள்ளோம்.அத்துடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள பிரபலத்தை மக்கள் அளிக்கும் ஓட்டை வைத்து கண்டுபிடித்து அவருக்கு Galatta Television Dream Lover என்ற பட்டத்தை அளித்தும் கௌரவித்து வந்தோம்.

அந்த வகையில் 2020-ல் மக்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரையின் ஆஸ்தான கதாநாயகன் மற்றும் கதாநாயகியை கண்டறியும் வகையில் Galatta Dream Television Celebrity என்ற Poll ஒன்றை கலாட்டா சார்பாக நடத்தி வருகிறோம்,இதில் உங்கள் மனம் கவர்ந்த நாயகன் மற்றும் நாயகிக்கு ஓட்டளித்து அவர்களை வெற்றிவாகை சூடவைக்க ரசிகர்கள் ஆவலாக வாக்களித்து வருகின்றனர்.

Galatta Dream Lover 2021 Voting