மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய அஷ்வந்தின் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இர்ஃபான் அஹ்மத் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் விஷ்ணு. இந்த ரோலில் அதிகம் கற்றுக்கொண்டதாக பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஷ்ணு விஷால் நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விட்டனர் படக்குழுவினர். 

கடந்த ஆண்டின் இறுதியில் எஃப்.ஐ.ஆர் பட டப்பிங் பணிகளை முறையான பாதுகாப்புடன் நிறைவு செய்தார் விஷ்ணு. ஒருபுறம் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன். ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. காடன் திரைப்படம் மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இரண்டு நாட்கள் முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் துவங்கியது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் விஷ்ணுவுடன் கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.