78 நாட்களை கடந்து செல்லும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது களைகட்ட துவங்கியுள்ளது. நேற்றயை எபிசோடில் கமல் ஹாசன் தோன்றி அகம் டிவி வாயிலாக போட்டியாளர்களுடன் உரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு தொலைபேசி மூலமாகவும் பேசினார். 

கன்பெக்ஷன் ரூமில் ஷிவானி கதறி அழுதது பற்றி கமல் கேட்டார். ஷிவானி வருத்தப்பட்டு சொன்ன விஷயங்கள் பற்றி குறிப்பிட்ட கமல் ஷிவானியின் பெயரை பத்து முறைகளுக்கும் மேல் சொன்னார். என் பெயரை வீக் எண்டில் சொல்வது கூட இல்லை என ஷிவானி சொன்ன நிலையில், அதற்காக தான் இப்போது பத்து முறை சொன்னதாக கமல் தெரிவித்தார். மேலும் நாமினேஷனில் இருந்து சேவ் ஆவதற்கான ஆர்டரில் கூட தான் கடைசி வரை வருவது பற்றி ஷிவானி வருத்தப்பட்ட நிலையில், முதல் ஆளாக அவரை காப்பாற்றுவதாக கமல் அறிவித்தார்.

இந்த வார எலிமிநேஷன் யார் என்பதை அறிவிக்க இந்த வார் டாஸ்க் போல சில கோழி முட்டைகள் கொண்டு வந்து வைத்திருந்தனர். அதை ஆரி மற்றும் ரியோவை வைத்து உடைக்க வைத்தார் கமல். அதன் மூலமாக அனிதா மற்றும் சோம் காப்பாற்றப்பட்டனர். அர்ச்சனா மற்றும் ஆஜித் மட்டும் எஞ்சி இருக்கின்றனர். இதில் தான் தான் வெளியில் போவேன் என அர்ச்சனா முன்பே கணித்து அவர் ரியோ, சோம் உள்ளிட்டவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். 

அதன் பின் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டதாக கமல் அறிவித்ததும் அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆனால் அர்ச்சனா மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். ரியோ தான் டைட்டில் ஜெயிக்கவேண்டும் என கூறிவிட்டு சென்றார் அவர். சோம் தனக்கு கிடைத்த நல்ல நண்பன் என கூறிய அவர் ஐ லவ் யூ சோம் என கத்திவிட்டு சென்றார். அர்ச்சனா பிக் பாஸில் இருந்து வெளியில் வந்து கமல்ஹாசனிடம் பேசினார். அப்போது இவ்வளவு விரைவில் வெளியில் வருவீர்கள் என எதிர்பார்த்தீர்களா என கேட்டார். அதற்கு அவர், இதுவே அதிகம் சார். நான் உள்ளே வரும் போது 40 நாள் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் வந்தேன் என கூறினார்.

மேலும் அன்புக்கு அடையாளமாக அனைவரும் என்னை கோழி என தேர்ந்தெடுத்தது பற்றி மகிழ்ச்சியாக பேசிய அர்ச்சனா அன்பு தான் சார் கடவுள்..என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் பலரும் ஆரி, அனிதா மற்றும் ஷிவானியை தேர்ந்தெடுக்கின்றனர். எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானி பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.