விராட் கோலியின் கேப்டன் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கும் இந்த சூழலில், இந்திய அணியில் கிட்டதட்ட 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி, சாதனைகளை நாம் ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்து உள்ள நிலையில், தோனி, ரவி சாஸ்திரிக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக டிவிட்டரில் விராட் கோலி பதிவு செய்துள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் விராட் கோலியின் கேப்டன் சகாப்தம் எல்லா விதமான போட்டிகளில் இருந்தும் முடிவுக்கு வந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர், கேப்டனாக எதை? எப்போது? எப்படியெல்லாம்? சாதித்துக்காட்டினார் என்பதைப் பற்றி தற்போது ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்.

- கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை முதல் முறையாக வழி நடத்தத் தொடங்கினார் விராட் கோலி. 

- கிட்டதட்ட 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி, இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வரச் செய்த சாதனைக்குறியவராக திகழ்ந்து வருகிறார்.

- இது வரை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.

- விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை ஏற்றத்தில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். 

- விராட் கோலி தலைமையில் இ்ந்திய அணி11 போட்டிகளை டிரா செய்து உள்ளது.

- டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5,864 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

- விராட் கோலி கேப்டனாக 5,864 ரன்கள் குவித்திருந்தாலும், இதில் 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதங்களும் அடங்கும்.

- 7 முறை ஆட்ட நாயகன் விருது, 3 முறை  தொடர் நாயகன் விருதை பெற்று அசத்திய கேப்டனாக விராட் கோலி திகழ்கிறார்.

- இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்களாக 20 சதம் அடித்த ஒரே கேப்டனாக விராட் திகழ்கிறார்.

- டெஸ்ட் அணி கேப்டனாக வெற்றி சதவிகிதத்தை 58.82 ஆக வைத்து இருக்கிறர் விராட் கோலி.

-  இந்திய கேப்டனாக அதிக பட்சமாக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமை பெற்று உள்ளார்.

- உலக டெஸ்ட் வரலாற்றில் 4 வது வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.

- விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது, இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. 

- விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து தற்போது ராஜினாமா செய்துள்ளபோது, இந்தியா தர வரிசையில் தற்போது உள்ள இடம் நம்பர் ஒன் ஆகும்.

- டெஸ்ட் கேப்டனாக கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்படவில்லை என்பது ஒரு சாதனையாக இருக்கிறது.

- அதே போல், 'என்னுடைய கேப்டன்ஷியில் நம்பிக்கை வைத்து, இந்திய அணியை முன்னோக்கி என்னால் கொண்டு செல்ல முடியும் என்று எனது மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட சகோதரர் தோனிக்கு மிகப் பெரிய நன்றி” என்று, தனது உருக்கமான பதிவை விராட் கோலி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.