கேரளாவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட வழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி அதனையே வீடியோ எடுத்து, சொந்த மனைவியையே கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

“மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிப்பது குறித்தான வழக்கு, கேரளாவில் கடந்த ஒரு வார காலமாக பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி, மேலும் மேலும் பல அதிர்ச்சிகளையும், பீதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், அரபு நாட்டிலிருந்து வந்த ஒரு நபர், அந்த பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் உயர் வகுப்பு குடும்பத்தினரை வைத்து, 'கப்பிள் சுவாப்பிங்', 'ஒய்ப் சுவாப்பிங்' என்கிற பெயரில், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு குரூப்பினை உருவாக்கி செயல்படுத்தி வந்திருக்கிறார்.

அந்த வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தள குரூப்பில் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களே அதிகம் இருந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக, அதில் உள்ள பலரும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இருந்து உள்ளனர்.

அப்போது, அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் ஆண்கள் சிலர் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருப்பார்கள் என்றும், அவர்களில் சிலர் அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு “நடக்க போகும் பார்ட்டிக்கு தங்களின் மனைவிகளை அழைத்து கொண்டு வந்து, எங்களைப் போல் நீங்களும் இப்படி குலுக்கள் முறையில் மாற்றி மாற்றி பிறரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, உங்களது ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்” என்று கூறி வந்ததாகவும் கூறப்பட்டது.

அதன்படி, இதில் கலந்து கொண்ட பல பெண்கள், வற்புறுத்தியே இப்படி தகாத முறையில் இப்படியான ஒரு செயலில் கணவர்களால் ஈடுபட வைக்கப்பட்டு உள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது, இந்த வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, “தன்னுடைய  நண்பரின் வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுகிறது” என்று கூறி, முதலில் தனது மனைவியை அந்த பெண்ணின் கணவன் அழைத்து சென்றிருக்கிறார்.

குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று வந்துவிட்ட பிறகு, தனது வீட்டிற்கும் திரும்பியதும் “நாம் ஏன் அந்த குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று வந்தோம் தெரியுமா?” என்று கேள்வியுடன், “மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிப்பது குறித்த” தகவலை தனது மனைவியிடம் விளக்கமாக கூறி உள்ளார். 

அதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மனைவி, கணவனின் இந்த ஆசைக்கு ஒற்றுக்கொள்ள மறுத்து உள்ளார்.

இதனால், அந்த கணவன், “குழந்தைகளை கொன்று விடுவேன்” என்று, மிரட்டி தன்னுடைய மனைவியை தனது ஆசைக்கு பணிய வைத்து உள்ளார். 

அதன் பிறகு, தனது மனைவியை வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்க  வைத்து, அதனை தனது மனைவிக்குத் தெரியாமல் அந்த கணவனே ரகசியமாக வீடியோ எடுத்து இருக்கிறார்.

பின்னர், அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி வந்திருக்கிறார். இப்படியாக, தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியை மிரட்டி வந்த அந்த கணவன், தனது மனைவியை பலருக்கும் விருந்தாக்கி வந்திருக்கிறார்.

இப்படியாக, நாளுக்கு நாள் தனது கணவனின் கொடுமை எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துப்போய் வேறு வழியின்றி, அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்தே இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் இன்னும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 

இவற்றுடன், இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளும் கைது செய்யப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.