சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முன்னணி நிகழ்ச்சி தான் விஜய் டிவியின்  பிக் பாஸ். வழக்கம்போல் ரசிகர்களின் பேராதரவோடு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் ஃபைனலிஸ்ட் ஆக டிக்கெட் டு ஃபினாலி டாஸ்கில் சிறப்பாக விளையாடி அமீர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வானார்.இதனையடுத்து சிறப்பாக விளையாடி வந்த சிபி பிக்பாஸ் வழங்கிய 12 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

அடுத்து வீட்டில் உள்ள போட்டியாளர்களால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் இரண்டாவது நபராக நிரூப் ஃபைனலுக்கு முன்னேறினார்.கடைசி நபராக தாமரைச்செல்வி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற, ராஜூ, நிரூப், அமீர், பிரியங்கா மற்றும் பாவனி ஆகிய ஐந்து போட்டியாளர்களும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 5 ஃபனலிஸ்ட்ஸ் ஆகினர். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரை தேர்வு செய்யும் முடிவு வழக்கம்போல் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்கள் வாக்களிப்பின்படி தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி முடிவு தற்போது வெளியானது. 

அதன்படி  பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளார். 105 நாட்கள் நடைபெற்ற இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு நிரம்பிய பேச்சாலும், எந்த தருணத்தில் தன் நிலை மாறாமல் கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு அமைதியான நடவடிக்கைகளாலும் அனைவரையும் கவர்ந்த ராஜு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக அனேக பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பும் ராஜூ ஜெயமோகன் மீது இருந்த நிலையில் அந்தக் கணிப்பு நிஜமாகும் வகையில் ராஜு வெற்றி பெற்றுள்ளார். 

மேலும் ரன்னர் அப் ஆக பிரியங்கா தேஷ்பாண்டே, மூன்றாவது இடத்தில் பாவனி, நான்காவது இடத்தில் அமீர் மற்றும் ஐந்தாவது இடத்தை நிரூப் என பிக் பாஸ் 5 கிராண்ட் ஃபினாலே ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கோலாகலமான நிகழ்ச்சியில் இந்த முடிவுகள் ஒளிபரப்பாகும்.