தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த நடிகராக, முன்னணி கதாநாயகனாக, ரசிகர்களின் அபிமானமான ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பாக உலக அளவில் IMDb பட்டியலின் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இதனையடுத்து தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைகிறார். தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாடிவாசல் திரைப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் இணைந்து புதிய படத்திலும் சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் முன்னதாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், பிரியங்கா அருள்முருகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்திலிருந்து வெளிவந்த வாடா தம்பி மற்றும் உள்ளம் உருகுதையா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து 3-வது பாடல் தற்போது வெளியானது. சும்மா சுர்ருன்னு எனும் துள்ளலான இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.