தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் சூப்பர் ஹிட் என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுக்கும் முன்னணி இயக்குனராகவும் வலம் வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மன்மத லீலை (A Venkat Prabhu Quickie). நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் மன்மதலீலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஜனவரி 15ஆம் தேதி வெளியானது.

முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் மெகா ஹிட்டானது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த மாநாடு திரைப்படம் பல தடைகளையும் தாண்டி வெளிவந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம், படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சொல்வதுபோல ரிப்பீட் மோடில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனிடையே மாநாடு திரைப்படம் குறித்த நெகட்டிவ் விமர்சனம் ஒன்றுக்கு அசத்தலாக பதிலளித்து உள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் ஒரு செய்தியாளர் ஒரு நபரிடம், “சமீபத்தில் பார்த்ததில் பிடிக்காத திரைப்படம் எது?” என்று கேட்க, அதற்கு அந்த நபர் “மாநாடு” என பதிலளித்தார். மேலும், “மாநாடு திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை… படம் திரும்பத் திரும்ப ஓடுவது எனக்கு தலை வலிக்கிறது… அதில் கதையும் இல்லை ஒன்றும் இல்லை… ஒரே சம்பவம் திரும்பத்திரும்ப நடைபெறுவதால்  பார்க்க ஆர்வமே போய்விடுகிறது. தலைவலியால் பாதி படத்தில் நான் எழுந்து வந்துவிட்டேன்” என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோவை குறிப்பிட்டு, “அனைத்து விமர்சனங்களையும் நாம் சரியான முறையில் எடுத்துக்கொள்ளவேண்டும் பிரேம்! நல்லதோ கெட்டதோ! நம்ம பாக்காத விமர்சனமா? அடுத்தப்படம் இவருக்கும் பிடிக்கிற மாதிரி புரியிற மாதிரி ட்ரை பண்ணுவோம்” என பதிலளித்துள்ளார். நெகட்டீவ் விமர்சனம் குறித்த, இயக்குனர் வெங்கட் பிரபுவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரேம்ஜி பகிர்ந்த வீடியோ மற்றும் வெங்கட் பிரபுவின் பதிலைக் கீழே உள்ள லிங்கில் காணலாம்.