உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் பக்கா ஆக்ஷன் பிளாக் படமாக தயாராகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

கமல் ஹாசனுடன் மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்திருக்கும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக அனிருத் இசையில் வெளிவந்த பத்தல பத்தல பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி யூடியூபில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் மிரட்டலான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமல்ஹாசன், யூகிசேது, ஜெயராம், ரமேஷ் அரவிந்த் மற்றும் சுமன் என ஐங்குறுந்தாடிகளன நண்பர்கள் இணைந்து தொலைபேசியில் பேசும் கலக்கலான காட்சியை நினைவுபடுத்தும் வகையில் விக்ரம் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…