#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் 2 வது குவாலிபையர் போட்டியிலேயே, #LSG லக்னோ அணியை வீழ்த்தி,  #RCB பெங்களூரு அணி பெற்றிப் பெற்று உள்ளது. இந்த போட்டியில், ருத்ர தாண்டவம் ஆடிய ரஜத் படிதார், சதம் அடித்து அசத்தினார்.

#IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிவடைந்து உள்ள நிலையில், நேற்று முன் தினம் முதல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் 2 வது ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில்,  #LSG v #RCB அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற  #LSG லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, #RCB பெங்களூரு அணி சார்பில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும் - முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களம் இறங்கினர்.

இதில், #RCB கேப்டன் டூப்ளசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அப்போது, #RCB அணியின் தூணாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் பார்க்கப்பட்ட விராட் கோலி, வெறும் 25 ரன்களுக்கு அவுட்டாகி அவரும் நடையை கட்டினார்.

அப்போது, களத்திற்கு வந்த இளம் வீரர் ரஜத் பட்டிதார், யாரும் எதிர்பார்க்காத விதமாக தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வான வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் நிலைத்து நின்று விளையாடி 49 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். இதனால், #LSG லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. 

அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கி, அவர் பங்கிற்கு அவரும் அதிரடி காட்டினார்.

முக்கியமாக, ரவி பிஷ்னோய் வீசிய 16 வது ஓவரில், ரஜத் பட்டிதார் விஸ்வரூபம் எடுக்கும் விதமாக ஆட, அந்த ஓவரில் மட்டும் 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி ரஜத் பட்டிதார் மிரட்டினார்.

இதன் மூலம், 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்களை சேர்த்தது. ரஜத் பட்டிதார் 54 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்சர் உட்பட மொத்தம் 112 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 37 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 

முக்கியமாக, இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 84 ரன்களை சேர்த்தனர். 

பின்னர்,  208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய #LSG  லக்னோ அணியும் தொடக்க வீரர்களாக டி காக் 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, கேப்டன் கே.எல். ராகுல் ஒன்மேன் ஆர்மியாக பொறுமையாகவு விளையாடிக்கொண்டு இருந்தார். அவருடன் அதிரடி காட்டிய வோஹ்ரா, 19 ரன்னில் வெளியேறி, பின்னர் வந்த ஹூடா, ராகுலுடன் ஜோடி சேர்ந்து சற்று அதிரடிக்காட்டினார். 

இந்த ஜோடி, கிட்டதட்ட 96 ரன் சேர்த்த நிலையில் ஹூடா, 45 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதனால், லக்னோ அணி அப்படியே தடுமாறியது.

பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் வெறும் 9 ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் ராகுல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 79 ரன்கள் சேர்த்து அவரும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

எனினும், இந்த ஆட்டம் #LSG  லக்னோ அணியின் பக்கமே இருந்தது. அப்போது களத்திற்கு வ்நத க்ருணல் பாண்டியா, வந்த வேகத்தில் அவுட்டாகி நடையை கட்ட, பவுலர் ஹேசல்வுட் மொத்த ஆட்டத்தையும் #RCB பக்கம் திருப்பிக்காட்டினார். 

இப்படியாக, கடைசி ஓவரில்  #LSG  லக்னோ அணி வெற்றிப் பெற 26 ரன்கள் தேவை என்ற நிலை உருவான நிலையில்,  #LSG  லக்னோ அணியால் வெறும் 9 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்,  #LSG  லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு, 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

இதன் மூலம், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியை பதிவு செய்தது.

எனினும், இந்த போட்டியில் #RCB அணியானது எக்ஸ்டிரா என்ற வகையில் 15 வைடு உள்பட மொத்தம் 22 ரன்களை வாரி வழங்கி இருந்தது.

#RCB அணியின் இந்த வெற்றியின் மூலமாக, குவாலிபர் 2 போட்டிக்கு #RCB முன்னேறி உள்ளது. 

இதனையடுத்து, நாளைய தினம் அகமதாபாத்தில் #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், #RCB அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.