ஐபிஎல் கிரிக்கெட் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியிடம் லிக்கனோ அணி தோல்வி அடைந்தது. 

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த கேப்டன் சாம்சன் ஜெஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். ஒரு சில பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டிய இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்து பொறுப்புடன் ஆடினர். சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் படிக்கல் களமிறங்கினார். அதன்பிறகு ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .

அதனைத்தொடர்ந்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178  ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். தொடர்ந்து 179 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல். ராகுல், டி காக்  களமிறங்கினர். முதல் ஓவரில் டிகாக் 7  ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆயுஷ் படோனி ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார் பின்னர் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் அடுத்து வந்த தீபக் ஹூடா, குருனால் பாண்டியா சிறப்பாக விளையாடினர் ,இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தனர்.குருனல் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக  விளையாடிய ஹூடா அரைசதம் அடித்தார் . தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர், 1 ரன்களிலும் ,சமீரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .கடைசியில் ஸ்டாய்னிஸ் போராடி 17 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனால்24  ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான்வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோத உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.