இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. செல்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் K.விவேக் இயக்கத்தில் புதிய படத்தில் மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், இயக்குனர் பாலா-சூர்யாவின் புதிய படம், தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், அருண் விஜயின் யானை, விஷாலின் மார்க் ஆண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார், முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஜீவி பிரகாஷ் குமாரின் ஐங்கரன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்  ரிலீசானது.

ஈட்டி படத்தின் இயக்குனர் இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில், ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

காமன் மேன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் B.கணேஷ் தயாரித்துள்ள ஐங்கரன் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஐங்கரன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியானது. அந்த நீக்கப்பட்ட காட்சி இதோ…