இந்திய திரை உலகின் முன்னணி திரை நட்சத்திரமாகவும் பாலிவுட் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் ஷாரூக்கானின் மகனான ஆரியன் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பலின் தடை செய்யப்பட்ட பல போதை பொருட்களை பயன்படுத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அந்த கப்பலை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொக்கைன், கஞ்சா உட்பட பல போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதனையடுத்து சொகுசு கப்பலில் பயணம் செய்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 13 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தற்போது வெளியான அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் பயணித்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி எனவும் அவருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.