#IPL2022 நேற்றைய போட்டியியில் ஃபினிஷிங்கில் பிரமிப்பு காட்டிய தோனி, கடைசி ஓவரில் தோனி மேஜிக் காட்டியதன் மூலமாக புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், ரோகித் சர்மாவும் சோகமான ஒரு சாதனையை படைத்திருப்பது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

#IPL2022 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியது, தோனி களத்தில் நின்ற அந்த கடைசி ஓவரான “கே.ஜி.எப் - 2” சீசன் போலவே இருந்தது. அந்த அளவுக்கு வானவேடிக்கை, மிரமிப்பு, மேஜிக் என்று, அந்த கடைசி ஓவரில் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் நிகழ்த்தி காட்டி, மீண்டும் தான் ஒரு பெஸ்ட் ஃபினிஷிர் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் தோனி.

இதனால், மொத்த #CSK டீமும், “சலாம் தோனி பாய்” என்று, “KGF” Mode -க்கு சென்றது.

குறிப்பாக, இதுவரை தோனி 20 வது ஓவர் போட்டியில் மட்டும் 121 பந்துகளை எதிர்கொண்டு, 323 ரன்களை விளாசி தள்ளியிருக்கிறார்.

அதன் படி, கடைசி 20 வது ஓவரில் மட்டும் தோனி இதுவரை மொத்தம் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடத்து நொறுக்கித் தள்ளியிருக்கிறார்.

இதில், தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 266.94 ஆகவும் இருக்கிறது. இப்படியாக ஒரு புதிய சாதனையை தோனி சத்தமே இல்லாமல் நேற்றைய போட்டின் மூலம் படைத்திருக்கிறார். 

மிக முக்கியமாக, தோனி படைத்திருக்கும் இந்த முக்கிய சாதனையை, அதிரடி மன்னர்களான டிவில்லியர்ஸ், கெயில் கூட இந்த சாதனையை இது வரை படைத்தது கிடையாது. 

இதன் மூலம், 20 ஓவர் போட்டிகளில் உலகத்திலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை தோனி படைத்து உள்ளார்.

முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு #IPL போட்டிதான் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை அப்போது சென்னை அணிக்கு இருந்தது. 

அப்போது, அந்த போட்டியின் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, அந்த ஓவரை இர்பான் பதான் வீச வந்தார். அந்த ஓவரில் 4,2,6,6 என விளாசி த்ரில் வெற்றியை தேடி தந்தார் தோனி. 

அந்த போட்டியின் போது, தோனிக்கு வயது 28. இதனையடுத்து, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே போன்ற ஒரு ஆட்டத்தை மும்பைக்கு எதிராக போட்டியில் நேற்றைய தினம் தோனியிடம் பார்க்க முடிந்தது. 

இதன் மூலமாக, வயது ஆனாலும் அதே வேகம், அதே துடிப்பு, ஃபினிஷிங் ஸ்டைலும் இன்றும் தோனியின் வேகமும், விவேகமும் இன்று வரை அவரிடம் நீடிக்கிறது,  #CSK ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், பெரும் வரவேற்பையும் பெற்று உள்ளது.

“தோனி நிகழ்த்தி காட்டிய மிகப் பெரிய வெற்றி இது” என்று, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, வெங்கடபிரசாத், ரஷீத் கான் உள்ளிட்ட பலரும் தோனியை பாராட்டி வருகின்றனர். 

மிக முக்கியமாக, “கேஜிஎஃப் திரைப்படத்தில் வரும் வசனம் போலவே, '10 பேரை அடித்து நான் டான் ஆகவில்லை. நான் அடித்த 10 பேரும் டான்'. என கதாநாயகன் யஷ் பேசும் போது திரையரங்கமே அதிரும். அது போலவே, தோனியின் ஆட்டம் முடியவில்லை. அவர், ஆட்டத்தையே முடித்து வைப்பவர்” என்று, முன்னாள் வீரர் முகமது கைஃப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அதாவது, ஒவ்வொரு மேட்ச்சையும் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டிய சூழு்நிலையில் தள்ளப்பட்டதால் தோனியும் இந்த அவதாரத்தை அவசியம் கருதி எடுத்திருப்பதாக, இணையத்தில் பலரும் தோனியை புகழ்ந்து வருகின்றனர்.

அதே போல், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் #MI கேப்டன் ரோகித் சர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதன் மூலம், #IPL போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14 வது டக் அவுட் இதுவாகும். இந்த டக் அவுட் மூலம், #IPL தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மிக மோசமான சாதனையை ரோகித் நேற்றைய போட்டியின் மூலம் படைத்து உள்ளார். 

ரோகித்திறகு அடுத்த படியாக பியூஸ் சாவ்லா 13 முறை டக் அவுட்டாகி 2 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.