தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் காத்து வாக்குல காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தில் இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. 

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது. வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 7 மணி அளவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.