17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்! தஞ்சாவூர் சோகம்..

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்! தஞ்சாவூர் சோகம்.. - Daily news

17 வயது சிறுமியை 12 வயது சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், அதுவும் தஞ்சாவூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தஞ்சாவூரில் மனோஜி பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் இவர்களுக்குள் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு, வலி அதிகமாகி இருக்கிறது.

இதனால், அலறித்துடித்த அந்த சிறுமியைப் பார்த்து பயந்து போன அவரது பெற்றோர், உடனடியாக சிறுமியை சற்று கூர்ந்து கவனித்து உள்ளனர்.

அப்போது தான், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது, அவரது பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தனது மகள் பிரசவ வலியால் அலறி துடிக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டு, உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சிறுமிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. 

மேலும், குழந்தை பெற்றெடுத்த சிறுமிக்கு வெறும் 17 வயது மட்டுமே நடப்பதால், மருத்துவமனையின் சார்பில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், குழந்தை பெற்றெடுத்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, கதறி அழுந்த அந்த சிறுமி, “தனது வீடு அமைந்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் நான் கர்ப்பம் அடைந்ததாக” அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் பெற்றோரிடமும் இது குறித்து தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த 17 வயது சிறுமியிடம் இருந்து புகாரைப் பெற்றுக்கொண்டு, வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுக்க காரணமாக இருந்த 12 வயது சிறுவனை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, 12 வயது சிறுவனால் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம், தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment