தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் வெற்றி 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெற்றி நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படமான ஜீவி படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததையடுத்து வரிசையாக பல விதமான த்ரில்லர் படங்களில் நடித்து வருகிறார்

கடைசியாக வெற்றி நடிப்பில் மீண்டும் த்ரில்லர் படமாக கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் வனம். தொடர்ந்து வெற்றி நடிப்பில் மெமரிஸ் மற்றும் ரெட் சாண்டல் ஆகிய த்ரில்லர் திரைப்படங்கள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன நிலையில் அடுத்தடுத்து ஜோதி, கண்ணகி மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் வெற்றி.

இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் VJ கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜீவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ஜீவி 2 படத்தை தயாரிக்க, இயக்குனர் VJ.கோபிநாத் எழுதி இயக்குகிறார். 

வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் தற்போது ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…