தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான பரத் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து விஷாலின் செல்லமே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

அடுத்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான காதல் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்த பரத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல விதமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக பரத் கதாநாயகனாக நடித்து வெளிவந்த காளிதாஸ்,நடுவன் திரைப்படங்கள் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே பரத்தின் திரைப்பயணத்தில் 50-வது படமாக தயாராகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர், மறைகாயர், குருப் ஆகிய படங்களின் வசனம் மற்றும் பாடல்களை தமிழில் எழுதிய எழுத்தாளர் RP.பாலா  முதல்முறை இயக்குனராக களமிறங்கும் இப்படத்தை தனது RP பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். 

லவ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். PG.முத்தையா ஒளிப்பதிவில் ரோனி ரஃபேல் இசையமைக்கிறார்.  இந்நிலையில் பரத்தின் 50-வது திரைப்படமான லவ் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…