#IPL2022 லீக் போட்டியில் #PBKS பஞ்சாப் அணியை பந்தாடிய #DC டெல்லி அணி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்த போட்டியின் மூலம் டேவிட் வார்னர்  - பிரித்வி ஷா ஆகியோர் புதிய சாதனை படைத்து உள்ளனர்.

#IPL2022 சீசினன் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் #PBKS பஞ்சாப் -  #DC டெல்லி அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற டாஸ் வென்ற #DC டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, #PBKS பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரர்களாக அகர்வால் - தவான் களமிறங்கிய நிலையில் அகர்வால் 24 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேற, அதன் தொடர்ச்சியாக வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால், #PBKS பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து, 69 ரன்கள் எடுத்து திணறியது. இப்படியாக அடுத்தடுத்து வந்த மற்ற வீரர்களுகம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, #PBKS பஞ்சாப் அணியானது 20 வது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, வெறும் 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதில், #DC டெல்லி அணி சார்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 

இதனால், 116 ரன்கள் என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய #DC டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - டேவிட் வார்னர் ஜோடி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி மிரட்டியது. இருவரும் மாறி மாறி சிக்சர், பவுண்டரிகளாக வான வேடிக்கை காட்ட இருவருமே பவர்பிளே முடிவில் அதிரடியாக 81 ரன்கள் சேர்த்தனர். 

அப்போது, மிக சூப்பராக விளையாடி ஆடிக்கொண்டிருந்த ப்ரித்வி ஷா 41 ரன்கள் சேர்த்து அவுட்டாக, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இப்படியாக, #DC டெல்லி அணி, வெறும் 10.3 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியை பதிவு செய்தது.

குறிப்பாக, #PBKS அணியில் தவான், மயங்க் அகர்வால், பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் என மிகப் பெரிய பேட்டிங் லைன் வைத்துக் கொண்டு, #PBKS பஞ்சாப் அணியானது தொடர்ந்து சொதப்பி வருவது, ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து உள்ளது.

இந்த போட்டியில்,  #DC டெல்லி அணி சார்பில் விளையாடிய ப்ரித்வி ஷா, 41 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் பிரித்வி ஷா, 2 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.

அதே போல், ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் விளாசிய 2 வது வீரர் என்கிற பெரும் சாதனையை படைத்து உள்ளார் டேவிட் வார்னர். இதில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 1500 ரன்களுக்கு வார்னர் குவித்து உள்ளார்.

அதாவது, நேற்றைய லீக் போட்டியில் 60 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் மொத்தம் ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.