தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் நானே வருவேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனராக தனக்கே உரித்தான பாணியில் சிறந்த படங்களை வழங்கி வரும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் .அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து சில தினங்களுக்கு முன்பு ரிலீஸான பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல்முறை நடிகராக களமிறங்கிய திரைப்படம் சாணிக் காயிதம். கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் சாணிக் காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சாணிக் காகிதம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற மே 6 ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரிலீசாகவிருக்கும் சாணிக் காயிதம் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் சற்றுமுன் வெளியானது. சாணிக் காயிதம் டீசர் இதோ…