பெண்கள் கிரிக்கெட்டில், கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடி மிதாலி ராஜ் புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு அணியை அதிக முறை வழி நடத்திய கேப்டன் என்ற புதிய சாதனையை தற்போது படைத்து உள்ளார். 

அந்த வகையில், இந்திய அணிய தற்போது விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து மொத்தம் 24 போட்டிகளில் இந்தியாவை உலகக் கோப்பையில் வழி நடத்தி சென்றிருக்கிறார் மிதாலி ராஜ். 

இதன் மூலமாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்கின் சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தற்போது முறியடித்து இருக்கிறார்.

அதாவது, நியூசிலாந்துக்கு எதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலமாக, மகளிர் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கி விளையாடிய 23 போட்டிகளின் சாதனையை, மிதாலி ராஜ் அப்போது சமன் செய்திருந்தார்.

அதே போல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை அதிக முறை வழி நடத்தியவர் என்ற ஒரு புதிய சாதனையும் மிதாலி ராஜ், தன் வசபடுத்தி இருக்கிறார். 

முன்னதாக, இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இது வரை 6 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர், தன் வசம் வைத்து உள்ளார் என்பதும் ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உலக அளவில் 6 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய 2 வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாவித் மியாண்டட் உடனான சாதனைப் பட்டியலில், மிதாலி ராஜ் தன்னையும் இணைந்து கொண்டு உள்ளார்.

அத்துடன், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உள்ள வீராங்கனைகளில் மிதாலி ராஜ், தற்போது முதல் இடத்தில் உள்ளார். 

அதன்படி, மிதாலி ராஜ், ஒட்டு மொத்தமாக 7668 ரன்கள் குவித்து, தனது சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இப்படியாக, பல்வேறு சாதனைகளை படைத்து வரும் மிதாலி ராஜிற்கு தற்போது 39 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.