பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மாவின் மகளுடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் கொஞ்சி கொஞ்சி பேசி விளையாடிய க்யூட் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடைபெற்றாலும், அது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருக்கும்.

முக்கியமாக, கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் திகழ்ந்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம்.

அத்துடன், இரு நாட்டு அரசுகளுக்கிடையே சுமூக உறவு இல்லாததால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே, அது தனி சுவாரஸ்யமாகவே கடந்த காலங்களில் அமைந்திருக்கின்றன. 

அந்த வகையில் தான், இந்த 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அதாவது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 

இந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத கை குழந்தையை சந்திக்கச் சென்றனர். 

அப்போது,  பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத கை குழந்தையை அவர், தூக்கி வைத்திருந்தார்.

அப்போது, அந்த குழந்தையைப் பார்த்த நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், அந்த அழகான குழந்தையுடன் மிகவும் அழகாக கொஞ்சி விளையாடினர். இது பார்ப்பதற்கே அவ்வளவு க்யூட்டமாக அமைந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் 7 மாத பெண் குழந்தையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

தற்போது, இந்த செல்பி புகைப்படமும், அவர்கள் அந்த 7 மாத கை குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

குறிப்பாக, இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.