“வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால், இணைந்து போட்டியிட தயார்” என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்து உள்ளது, பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலத்திலும் பாஜக அபார வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்தது.

அதே நேரத்தில், பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்தது. இதனால், அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை முதன் முதலாக பிடித்து உள்ளது. 

குறிப்பாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை அடைந்தது. ஆனால், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போரடிய நிலையில், அது முற்றிலுமாக பலன் அளிக்கவில்லை. 

அதே போல், கோவாவிலும் காங்கிரஸ் கட்சி இழுபறியாக இருந்த நிலையில், பாஜகவே அங்கு வெற்றிப் பெற்றது.

இப்படியாக, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் தான், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். 

இது பற்றி பேசி உள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்த பானர்ஜி, “காங்கிரஸ் கட்சி விரும்பினால், வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து பணியாற்றலாம்” என்று, தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “சமாஸ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆறுதலான வார்த்தைகளையும்” அவர் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, “இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளைக்கண்டு யாரும் சோர்வடைய வேண்டாம் என்றும், நேர்மறையாக சிந்தியுங்கள் எனவும்” அவர் யோசனை கூறி உள்ளார். 

மேலும், “முதலில் இதனை தோல்வியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இது நடைமுறை சாத்தியம் அற்றது” என்றும், மம்த பானர்ஜி தெரிவித்து உள்ளார். 

அதாவது,  பாஜக - காங்கிரஸ் அல்லாத 3 வதாக ஒரு மாற்று கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான், மம்த பானர்ஜியின் இந்த அறிவிப்பான, பாஜகவை எதிர்க்க எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள்வதற்கான முன் முயற்சியகவே பார்க்கப்படுவதாக, அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருவதையும், அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.