தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்கள் கலந்து கொண்டு மிகுந்த பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் சீசன் 2-வின் ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜஸ்பர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். 

மேலும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட படங்களிலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.இதனிடையே ஜூனியர் எம்ஜிஆருடன் இணைந்து ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் இரும்பன். இயக்குனர் கீரா இயக்கத்தில் லெமூரியா மூவிஸ் தயாரித்துள்ள இரும்பன் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இரும்பன் திரைப்படத்திலிருந்து உன் வெள்ளந்தியும் அழகுதான் பாடல் தற்போது வெளியானது. பிரபல இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் மற்றும் பாடகி சைந்தவி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. அந்த உன் வெள்ளந்தியும் அழகுதான் பாடல் இதோ…