வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மந்தனா மாஸ் காட்டி வந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் சதமடித்து அசத்தி உள்ளார். 

12 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

அங்குள்ள ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீசுடன் அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

அதன் படி இந்திய அணி சார்பில் களமிறங்கிய தொடக்க வீராங்கனான ஸ்மிருதி மந்தனா - யாஸ்திகா பாட்யா களம் இறங்கினர். 

அதன் படி, ஓபனர் யாஸ்திகா அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து திடீரென்று ஆட்டம் இழந்தார். 

இதனைத் தொடர்ந்து கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதன் தொடர்ச்சியாகவே ஹர்மன்ப்ரீத் இறங்கிய நிலையில், இந்திய அணியின் ஆட்டம் தாருமாறாக மாறியது. 

அதாவது, 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, ஹர்மன்ப்ரீத் உடன் இணைந்து, தனது இன்னிங்ஸை தன் பக்கம் திருப்பினார் ஸ்மிருதி மந்தனா.

ஸ்மிரிதி மந்தனா அபாரமாகவும், அதிரடியாகவும் விளையாடி சதமடித்து அசத்தினார்.

குறிப்பாக, சற்று நெருக்கடியான நிலையில் ஸ்மிருதி மந்தனாவும், ஹர்மன்ப்ரீத் இணையர் இந்த போட்டியை இந்தியா பக்கமாக அதிரடியாக மாற்றி அமைத்தனர். 

அந்த வகையில், அவர்கள் இருவரும் 184 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த, எதிர் அணியை வெளுத்து வாங்கினார். இதனால், இந்திய அணியானது 300 ரன்களை கடந்து அற்புதமான ஒரு ஸ்கோரை எட்டியது.

அந்த வகையில், ஸ்மிருதி மந்தனா 123 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி அசத்தி உள்ளார்.

ஸ்மிருதி மந்தனா  சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அபார சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து முற்றிலுமாக மீண்டெழுந்து உள்ளது.

மேலும், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு, 317 ரன்களை அதிரடியாக குவித்தது. 

முக்கியமாக, ஹர்மன்ப்ரீத் 107 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து 49 வது ஓவரில் அவுட் ஆனார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்து உள்ள 4 வது சதம் இதுவாகும். 

மிக முக்கியமாக, இந்த சதத்தோடு உலகக் கோப்பை அரங்கில் இது அவருக்கு 2 வது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.