“சென்னை சூப்பர் கிங்ஸ்சில் ரெய்னா புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்” என்று, நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டௌல் கருத்து கூறியுள்ளார்.

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் பீவர் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்து உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் மெகா ஏலம் நடந்தது. 

அந்த மெகா ஏலத்தின் போது, கடந்த கால ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல வீரர்களும் இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போனதும், அரங்கேறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது, இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில், சிஎஸ்கே அணியானது தொடக்கம் முதலே தொடர்ந்து வீரர்களை எடுக்க மிகவும் திணறி வருந்ததாகவும் கூறப்பட்டது.

மிக முக்கியமாக, இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே விளையாடி சின்ன தலை என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை, இந்த முறை சென்னை உட்பட எந்த அணிகளும் எடுக்க முன்வரவில்லை. இதனால், சென்னை அணி மிக கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. 

இதனால், சென்னை ரசிகர்கள் பலரும் சென்னை அணியின் நிர்வாகிகளை மிக கடுமையாக சாடினார்கள். அத்துடன், “மிஸ்யூ ரெய்னா” என்று, சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.

அதே போல், “கடந்த 2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகாதது” கிரிக்கெட் ரசிகர்களை இன்னும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த சூழலில் தான், “தோனியின் விசுவாசத்தை இழந்ததே, சுரேஷ் ரெய்னா 15 வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியால் புறக்கணிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம்” என்று, நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டௌல் தற்போது தனது தரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் தான், சென்னை அணியில் இருந்த ரெய்னா தனது விசுவாசத்தை முதன் முறையாக இழந்தார்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “இதற்கான காரணத்தைப் பற்றி விரிவாக பேச தேவையில்லை என்றும், ஏன் அப்படி நடந்தது என்றும் பேச தேவையில்லை என்றும், அப்படியான அந்த தருணத்தில் அவர் தனது விசுவாசத்தை எதனால் இழந்தார் என்பதை யூகிக்க பல காரணங்கள் இருக்கிறது” என்றும், கூறினார்.

“இவை அனைத்தையும் விட, அந்த தருணத்தில் தோனியிடமும், சென்னை அணியிடமும், அவர் தனது விசுவாசத்தை இழந்து போனார் என்றும், அது போன்ற ஒரு செயலை நீங்கள் செய்தப் பிறகு, பெரும்பாலும் உங்களை மீண்டும் மனதார யாரும் வரவேற்க மாட்டார்கள்” என்றும், குறிப்பிட்டு பேசிய அவர், “தற்போது சுரேஷ் ரெய்னா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதுடன், பல ஷார்ட் பால் பந்துகளுக்கு அவர் தற்போது பயப்படுகிறார்” என்றும், தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

மேலும், “சர்வதேச போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடாத சுரேஷ் ரெய்னா, அதிலும் உடற்தகுதி இல்லாத அவருக்கு தற்போது விதிகக்ப்பட்ட அடிப்படை விலை மிக அதிகம் என்றும், அதனால் அவ்வளவு பணத்தை செலவு செய்ய யாருமே தயங்குவார்கள் என்றும், அப்படி விதிக்கப்பட்ட அடிப்படை விலை மிக அதிகம்மே” என்றும், அவர் விமர்சனம் செய்து உள்ளார்.

அதே நேரத்தில், “சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லில் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றும், ஆனால், முதல் 8, 9 ஆண்டுகளில் முன்னணியாக விளங்கியவர், தற்போது பார்மில் இல்லை என்றால், யார் அவரை அவ்வளவு ஏலத்திற்கு எடுப்பார்கள்” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மிக முக்கியமாக, “கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தால், ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்த சென்னை அணி நிர்வாகம், சமீப காலங்களாக, அவர் மோசமான பார்மில் இருந்து வருவதை காரணம் காட்டி, தற்போது அவரை ஏலத்தில் எடுக்கவில்லை” என்கிற உண்மையையும், சைமன் டௌல் ஒரே போடாக போட்டு உடைத்து உள்ளார்.

இதனிடையே, சென்னை அணியில் எடுக்காமல் விடப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்காக, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி வேதனை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.