காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்! - Daily news

காதலனை கட்டிப்போட்டு, அவரது காதலியான மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

அதே கல்லூரியில், 22 வயது இளைஞர் சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)படித்து வருகிறார். 

இப்படியான சூழலில் தான், 18 வயதான அந்த 2 ஆம் ஆண்டு மாணவியும், 22 வயதான சரவணனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 

இந்த நிலையில், நேற்று மாலை காதலர்கள் இருவரும் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு 2 இளைஞர்கள் கடும் மது போதையில் அந்த கடற்கரைக்கு வந்து உள்ளனர். 

அங்கு, காதலர்கள் 2 பேரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள் இருவரும், மது போதையில் காதலர்களிடம் சென்ற அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். 

அந்த நேரத்தில், திடீரென்று, காதலன் சரவணனை கடுமையாக தாக்கிய அவர்கள் இருவரும், அவருடன் வந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து முயன்று உள்ளனர்.

இதனைப் பார்த்த அந்த காதலன், அந்த காமுகர்களிடம் இருந்து தனது காதலியை மீட்க கடுமையாக போராடி உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், அந்த காதலனை கடுமையாக தாக்கிவிட்டு, அவனது கை கால்களை கட்டிப் போட்டு உள்ளனர். அதன் பிறகு, அந்த மாணவியை தூக்கிச் சென்று, அவர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இது தொடர்பாக செல்போனில் தனது தம்பிக்கு தகவல் கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தம்பி, அலறி அடித்துக்கொண்டு அந்த கடற்கரைக்கு ஓடி உள்ளார்.

அப்போது, அந்த கடற்கரையில் கை கால்கள் கட்டப்பட்டு இருந்த காதலனை மீட்ட அந்த தம்பி, அங்கிருந்த தனது அக்காவையும் மீட்டுக்கொண்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள மசூலிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து 24 வயதான நாகபாபு என்னும் இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment