தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை என பல படங்களில் நடித்து மிகப் பிரபலமடைந்தார். 

மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றன .தமிழில் சூப்பர் ஹிட்டான ராட்சசன் திரைப்படம் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக அடுத்து தயாராகி வருகிறது மோகன்தாஸ் திரைப்படம். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்தாஸ் திரைப்படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கிவருகிறார். இதனிடையே நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக சிலதினங்களுக்கு முன் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிநடை போடுகிறது  FIR திரைப்படம். 

நடிகர் விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில், FIR திரைப்படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் & இயக்குனர் கௌரவ் நாராயணன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள FIR படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். 

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விறுவிறுப்பான திரைப்படமாக வெளிவந்த FIR திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை (மார்ச் 12-ம் தேதி) முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிப்பரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.