அகில இந்திய அளவில்  பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த கூடைப்பந்து ஆடவர் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த கூடைப்பந்து ஆடவர் போட்டி நடந்தது இதில் முதல் இடத்தில் சென்னை பல்கலைக்கழகம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. புது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக அணியினர் இரண்டாம் இடம் பிடித்து ரன்னர்-அப் கோப்பையை வென்றனர். இந்த அகில இந்திய அளவிலான போட்டியை சென்னையை அடுத்து படூரில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் ஏற்பாடு செய்து நடத்தியதது. இதில்  192 கூடைப்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து முதலாவது அரை இறுதிப்போட்டியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் இளவரசர் தியாகி 24, மாணிக் 17 புள்ளியும் 86 - 80 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் அபிஷேக் கவுடா 36 புள்ளிகள், வைஷாக் நம்பியார் 15 புள்ளிகள் வென்றனர். இரண்டாவது அரையிறுதி போட்டியில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் சேர்ந்த மாணவர் சூர்யா. பி 27, ஆனந்தராஜ் 20,  86 - 73 என்ற செட் கணக்கில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆதித்ய கரண் 14, கன்வர் குபாஸ் சிங் - 13 புள்ளியில் வென்றனர்.

 மூன்றாவது  மற்றும் நான்காவது  இடத்தை பிடிக்க நடந்த போட்டியில் பஞ்சாப் பல்கலைக்கழகம் அணியினர் கன்வார் குர்பாஸ் சிங் 26, அரவிந்தர் சிங் 15,  75-52 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் தனய் தாட்டே 18, வைஷாக் நம்பியார் 13, புள்ளியும் வென்றனர். இறுதி போட்டியில்  சென்னை  பல்கலைக்கழகம் அணியினர் ஆனந்தராஜ் 26, லோகேஷ்வரன் 23, 97 – 78 என்ற புள்ளிக்கணக்கில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆகாஷ் ஹூடா 20, மாணிக் 14 வென்று சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்த அகில இந்திய போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. புது டெல்லி, உத்தரபிரதேசம், சென்னை பல்கலைக்கழகம்,  மும்பை பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா, லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம், குவாலியர், மத்திய பிரதேசம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூர், கர்நாடகா மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ரோஹ்தக், ஹரியானா, குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருக்ஷேத்ரா, ஹரியானா ஆகிய பல்கலைக்கழகங்கள் வரும் ஏப்ரல் 24 முதல் பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.