தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஆதி தமிழில் மிருகம் திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆதி தமிழ் & தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஹீரோ, வில்லன் & குணசித்திர கதாபாத்திரங்கள் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடித்து வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள தி வாரியர் திரைப்படத்தில் ஆதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். இதனிடையே நடிகர் ஆதி-நடிகை நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தமிழில் டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தவர் நிக்கி கல்ராணி. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி நடிகர் மிர்ச்சி சிவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமான இடியட் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகதநாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஆரம்பக்கட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக திருமணத்தை நோக்கி இந்த ஜோடி நகர்ந்துள்ளது. 

அந்தவகையில் ஆதி-நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிச்சயதார்த்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் ஆதி-நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த வீடியோ இதோ…