சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திரசிங் தோனி விலகி உள்ள நிலையில், புதிய கேப்டன் யார் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன், வரும் 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 

இந்த சீசனில் எப்போதும் போல் வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என 2 அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளதால், கூடுதலான எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

அத்துடன், இந்த சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிர வைத்துவைத்துக்கொண்டே இருக்கிறது.

இந்த முறையும், கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மும்பை, புனே நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன், வான்கடே மைதானத்தில் 25 சதவீத அளவிற்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், போட்டிக்களுக்கான டிக்கெட் விற்பனை தற்போது களைகட்டி உள்ளன.

கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் மோதிய சென்னை - கொல்கத்தா அணிகள் தான், இந்த முறை முதல் போட்டியில் மோதி விளையாடுகிறது. 

அதன் படி, வரும் 26 ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால், சென்னை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திரசிங் தோனி விலகுவதாக, திடீரென்று அறிவித்து உள்ளார். 

மேலும், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஜடேஜா செயல்படுவார்” என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

குறிப்பாக, “கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார்” என்றும், சென்னை அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

முக்கிய ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து, சென்னை அணியில் முதல் போட்டியில் இருந்து மகேந்திரசிங் தோனி கேப்டனாக தொடர்ந்து வந்தார். இப்படியான நிலையில் தான், “சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திரசிங் தோனி விலகுவதாக” அறிவித்து உள்ளது, சென்னை ரசிர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டதற்கு, பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது, ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது” என்றும், அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.