தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ்குமார் அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இசையமைப்பாளராக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கும் GV.பிரகாஷ் இசையில் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.  

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்குனராக அறிமுகமாகும் செல்பி படத்தில் G.V.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய  G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

செல்ஃபி திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரைய‌ரங்க‌ளி‌ல் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் செல்ஃபி படத்திலிருந்து Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. அந்த Sneak Peek வீடியோ இதோ…