சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கேப்டன் எம்.எஸ் தோனி பதில் அளித்தள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன், வரும் 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளன. இதனால், மொத்தம் 10 அணிகளுக்கு ஏலம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 10 நாட்களுக்குளே உள்ளன.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்க, இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி உள்ளிட்ட சென்னையின் அனைத்து வீரர்களும் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில், ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ் தோனி, மாஸ்டர் ஆஃப் பினிஷிங்ன்னு அழைக்கப்பட்டு வருகிறார். இதற்கு, அவர் களத்தில் புரிந்த பல்வேறு சாதனைகளே இன்று சாட்சிகளாக இருக்கின்றன.

இந்த நிலையில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி உடன், சென்னை ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், சென்னை ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கேப்டன் தோனி, பதிலளித்து பேசினார்.

அந்த வீடியோவில், கேள்வி எழுப்பிய ரசிகர் “அனைவருக்கும் தெரியும் சார், களத்தில் நீங்கள் தோனி தான் நம்பர் 1 என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வீட்டில் தோனி எப்படி?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதனை கேட்டு சிரித்துக்கொண்டே பதில் அளித்த கேப்டன் தோனி, “அனைவருக்கும் தெரியும், வீட்டில் மனைவி தான் நம்பர் 1 என்று, பதில் அளித்தார். 

தோனி தனது மனைவி குறித்து சுவாரஸ்யமாக பதில் அளித்து பேசிய இந்த வீடியோ தான், தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
 
இதனிடையே, “ஐபிஎல் 15 வது சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும்” என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.