ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

12 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 18 வது லீக் போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய மகளிர் அணி மோதி விளையாடியது. 

இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய கூறியது. 

அதன் படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா - ஸஃபாலி வெர்மா ஜோடியானது வந்த வேகத்திலேயே நடையை கட்டியது. இந்த ஜோடி, 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்திய அணி, முதல் 28 ரன்கள் எடுப்பதற்குள் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறிப் போனது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா பாட்டியா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சற்று நிதானமாக விளையாடிய நிலையில்,  அரைசதம் அடித்து அசத்தினர்.

மிகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடிய கேப்டன் மித்தாலி ராஜ், ஒரு நாள் போட்டியில் 63 வது அரை சதத்தை பதிவு செய்தார். பதிலுக்கு எதிர் முனையில் நின்றிருந்த யாஷ்திகா பாட்டியாவும் தனது பங்கிற்கு 59 ரன்கள் குவித்தார். 

அந்த வகையில், இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மித்தாலி ராஜ், 96 பந்துகளில் 1 சிக்சர், 4 ஃபோர் உட்பட மொத்தம் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அதே போல், யாஷிகா பாட்டியா83 பந்துகளில் 6 பவுண்டரி எடுத்து மொத்தம் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹர்மன்பிரித் கவுர், தனது பாணியில் எப்போதும் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை இன்னும் எகிர வைத்தார். 

ஹர்மன்பிரித் கவுர், 47 பந்துகளில் 6 ஃபோர் விளாசி மொத்தம் 57 ரன்கள் விளாசினார். 

இறுதியில் பூஜா வஸ்ட்கர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.

அதன் படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ரச்சேல் ஹெய்ன்ஸ் - அலிசா ஹீலி ஜோடி சிறப்பாக விளையாடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

அட்டகாசமாக விளையாடிய அலிசா ஹீலி, 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரசேல் ஹெய்ன்ஸ் 43 ரன்களில் அவுட்டார்ன. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேக் லேன்னிங், எல்லிஸ் பெர்ரி ஜோடி நிலைத்து நின்று விளையாடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முக்கியமாக, ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் 225 ரன்கள் எடுத்திருந்த நிலையில, அங்கு மழை குறுக்கிட்டதால் போட்டியானது சிறிது நேரம்  நிறுத்தப்பட்டது. 

இதனால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 9 ஓவரில் 53 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை அப்போது உருவானது.

பிறகு சற்று நேரத்தில் மழை நின்றதுடன் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி 28 ரன்னில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அப்போது, பெத் மூனி  மெக் லேன்னிங் களம் இறங்க சிறப்பாக விளையடினர்.

குறிப்பாக, போட்டியின் 48 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேன்னிங் 97 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாரத விதமாக ஆட்டமிழந்தார். 

அப்போது, ஆஸ்திரேலியா வெற்றி பெற கடைசி ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால், இந்த போட்டியது திக் திக் நிமிடங்களாக மாறிப்போனது, இந்த போட்டியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அப்போது, கடைசி ஓவரை இந்திய அனியின் கோஸ்வாமி வீசினார். 

அப்போது, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஸ்ட்ரைக்கில் நின்று எதிர்கொண்டார். 

அதன்படி, கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி பறந்த நிலையில், மீதமிருக்கும் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை வந்தது.

அதன் தொடர்ச்சியாக, கடைசி ஓவரில்  2வது பந்தில் 2 ரன்களும், அதற்கடுத்த பந்தில் பவுண்டரியும் பறந்த நிலையில்,  49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதன் படி, 3 பந்துகள் எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 

அத்துடன், இந்திய அணி சார்பில் பூஜா வஸ்திராகர் 2 விக்கெட்டுகளையும், சிநேஹ் ராணா, மேக்னா சிங் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.