இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி சிவா, தொடர்ந்து நடித்த தமிழ் படம், இயக்குனர் சுந்தர்.சி-யின் கலகலப்பு, இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் வணக்கம் சென்னை, தமிழ் படம் 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றன.

முன்னதாக யோகிபாபு & சிவா இணைந்து நடித்துள்ள சலூன், நடிகர் ஜீவா & சிவா இணைந்து நடித்துள்ளா கோல்மால் மற்றும் யோகி பாபு , சிவா, பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடிக்க 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள காசேதான் கடவுளடா ஆகியப் படங்களுடன் சிவா கதாநாயகனாக நடித்துள்ள சுமோ படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் அடுத்து மிர்ச்சி சிவாவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் இடியட்.தில்லுக்குதுட்டு பட இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள இடியட் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன்  நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சிவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி , ஊர்வசி, அக்ஷரா கௌடா, மயில்சாமி, ஆனந்தராஜ் & ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இடியட் படத்திற்கு விக்ரம் சிவா இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இடியட் திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடியட் படத்திலிருந்து ஒரு பார்வையால பாடல் நாளை (மார்ச் 29) ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ஒரு பார்வையால பாடல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…