GV பிரகாஷின் செல்ஃபி பட ப்ரோமோ வீடியோ இதோ!
By | Galatta | March 28, 2022 20:32 PM IST
தமிழ் ரசிகர்களுக்கு பல ஃபேவரட் பாடல்களை கொடுத்த முன்னணி இசையமைப்பாளராகவும் பிரபல நடிகராகவும் கலக்கி. வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கும் GV.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் GV இசையில் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. நடிகராக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது GV. பிரகாஷ் நடித்து வருகிறார்.
அடுத்ததாக வருகிற ஏப்ரல் 1ம் தேதி ரிலீஸாகிறது ஜீவி பிரகாஷ் குமாரின் செல்ஃபி திரைப்படம். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்களில் ரிலீஸாகவுள்ள செல்ஃபி படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் செல்ஃபி படத்திலிருந்து அசத்தலான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
#selfie new promo .. releasing #april 1st in theatres … pic.twitter.com/bl4iicmoqs
— G.V.Prakash Kumar (@gvprakash) March 28, 2022
Shoot Mode On For Siddharth & GVP's Project
16/07/2018 01:42 PM
GVP's Pencil from December 12?
10/12/2013 08:25 PM
GVP croons for a special song!
17/10/2013 07:34 AM