கடந்த ஐபிஎல் போட்டிகளில் கொண்டாடப்பட்ட முக்கியமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போன சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இதனால், இந்தியாவில் ஐபிஎல் பீவர் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்து உள்ளது.

எப்போதும் வழக்கமான 8 அணிகளுடன் இந்த ஆண்டு முதல் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்து உள்ளதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மெகா ஏலம் நடந்துகொண்டு இருக்கிறது.

அதன்படி, காலை 12 மணி முதல் நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

அந்த வகையில், கடந்த கால ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல வீரர்களும் இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போனதும், அரங்கேறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, இன்றைய தினம் ஐபிஎல் மெகா ஏலத்தில், சிஎஸ்கே அணியானது தொடக்கம் முதலே தொடர்ந்து வீரர்களை எடுக்க மிகவும் திணறி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் இந்த மெகா ஏலத்தில் இடம் பெறாமல் போனதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், “சென்னை அணியிலிருந்து பயிற்சியாளர் ஃபிளமிங் வெளியேறிவிட்டாரா?” என்கிற சந்தேகமும், ரசிர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

அதாவது, இன்றைய தினம் ஏலத்தின் தொடக்கத்தில் சில முக்கிய மற்றும் முன்னணி வீரர்கள் எடுக்க சென்னை அணி குறி வைத்தது என்றே கூறலாம். ஆனால், அவர்கள் அதிக தொலைக்கு கேட்கப்பட்டதால், சென்னை அணி அப்போது தனது கஞ்சத்தனத்தை காட்டியது என்றே கூறப்படுகிறது.

முக்கியமாக, சென்னை வீரர் அஸ்வின் பெயர் வந்த போது, சென்னை அணியானது அவரை திருட்மபி கூட பார்க்கவில்லை என்று விமர்சிகக்ப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே சென்னை அணியின் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்த டுபிளஸிஸ்க்கு சென்னை அணி மிக கடுமையாக போராடியது. அதுவும் 4 கோடி ரூபாய் சென்றதாகவும், ஆனால் அவர் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் போதே சென்னை அணி பின் வாங்கியது என்றும், விமர்சக்கப்பட்டு வருகிறது. 

அதே போன்று, டேவிட் வார்னர், டி காக் ஆகியோருக்கு முதலில் ஆர்வம் காட்டிய சென்னை அணி, அதன் தொடர்ச்சியாக போட்டி  பந்தயத்திலிருந்து சற்றும் தாமதிக்காமல் வெளியேறியது என்றும், விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எனினும், இளம் வீரர்களை சென்னை அணி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதிஷ் ராணா, தீபக் ஹூடாவை சென்னை அணிக்கு ஏலத்தில் தேர்வு செய்ய ஆர்வம் காட்டிய நிலையில், ஹூடாவை 5.75 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

மேலும், ஆல் ரவுண்டர் ஹோல்டரையும் சென்னை அணி தவறவிட்டு உள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

தற்போது சென்னை அணி நடுவரிசை விரர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் குறிவைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே விளையாடி சின்ன தலை என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை, இந்த முறை சென்னை உட்பட எந்த அணிகளும் எடுக்க முன்வரவில்லை.

அவரைப் போலவே, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரையும் அவர்களது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எடுக்க எந்த அணியினரும் முன்வரவில்லை. இந்த நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது அது பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அதே போல், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

மேலும், இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

அதே போல், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் முகமது நபி ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

அத்துடன், இன்றைய தினம் ஏலத்தில் எடுக்காமல் இருக்கும் வீரர்கள் அனைவரும், நாளைய தினம் கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுக்க ஒருவேளை வாய்ப்பு அமையலாம் என்றும் கூறப்படுகிறது.