2022 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது தொகுப்பாளர் திடீரென்று மயங்கி விழுந்ததால், தற்காலிகமாக ஏலம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏலம் மீண்டும் தொடங்கி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப் பெரிய எதிா்பாா்ப்புக்கு மத்தியில் தான், ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று காலை முதல் பெங்களூருவில் தொடங்கி இருக்கும் நிலையில், 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

அதாவது, 15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசியில் தொடங்க இருப்பதால், இதற்கான பணிகள் யாரும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளன. இதனால், மொத்தம் 10 அணிகளுக்கு இன்றைய தினம் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக பிரபல இந்திய வீரரான ஷிகர் தவான் அறிவிக்கப்பட்ட நிலையில், ஷிகர் தவானை 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அதாவது, பெங்களூருரில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தை, ஹக் எட்மேட்ஸ் என்பவர் மிக சிறப்பாக தொகுத்து நடத்தி வந்தார். 

இந்த ஏலத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் ஹக் எட்மைட்ஸ். எட்மீட்ஸ் தனது 36 வருட அனுபவத்தில் உலகளவில் 2500 க்கும் மேற்பட்ட ஏலங்களை நடத்தியுள்ளார். பன்னாட்டு நுண்கலை, கார்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏலம் விடும்போது, இவரைத்தான் உலக நாடுகளில் பலரும் அழைப்பது வழக்கம்.

அதுவும், ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஹக் எட்மைட்ஸ், ஏலத்தை நடத்தி வருகிறார். 

அந்த வகையில், எப்போதும் போல் இன்றுறும் ஐபிஎல் ஏலத்தில் நன்றாக சிரித்தபடியே ஹக் எட்மைட்ஸ் ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், இன்று அவர் ஜாலியாக சிரித்து பேசியபடி ஏலம் விட்டுக்கொண்டு இருந்த நிலையில், கடைசியாக ஹஸரங்காவை ஏலம் விட்ட போது ஹக் எட்மைட்ஸ், திடீரென்று அங்கேயே மயங்கி கீழே விழுந்து உள்ளார். அதற்கு முன்புதான் விரைவில் மதிய உணவு சாப்பிட செல்லலாம் என்று ஹக் எட்மைட்ஸ், அந்த மேடையில் குறிப்பிட்டு ஜாலியாக பேசியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருக்கும் போது, ஹக் எட்மைட்ஸ் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதனைப் பார்த்த சக அணி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து சட்டென்று எழுந்து நின்று உள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, அவருக்கு அங்கு அவசரமாக முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏலம் எடுக்கும் இடத்திலும் உணவு இடைவேளையும் விடப்பட்டது.

இந்த நிலையில் தான், “ஐபிஎல் ஏல மேடையில் மயங்கி விழுந்த எட்மீடஸ் நலமாக உள்ளார் என்றும், மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றும், தகவல்கள் கூறி உள்ளன. 

குறிப்பாக, “போஸ்டுரல் ஹைபோடென்சன்” காரணமாக, ஹக் எட்மைட்ஸ் திடீரென்று மயங்கி விழுந்தார் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

அத்துடன், தற்போது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தை சாரு சர்மா என்பவர் தற்போது தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.