2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் இசான் கிஷனை யார் ஏலத்தில் எடுப்பது என்பது குறித்து காவ்யா - நீட்டா அம்பானி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அதிகபட்ச ஏலத்தொலையாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.25 கோடி ரூபாயக்கு ஏலத்தில் எடுத்தது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

தமிழக வீரர்கள்

- தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

- தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 5.50 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

- தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை, போட்டி போட்டுக்கொண்டு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

இந்திய வீரர்கள்

- குறிப்பாக, மிக கடும் போட்டிகளுக்கு மத்தியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி இசான் கிஷனை ஏலத்தில் எடுத்து, தக்க வைத்துக்கொண்டது. அதன்படி, இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதாவது, முதலில் எந்த வீரரையும் எடுக்க ஆர்வம் காட்டாமல் இருந்த மும்பை அணியானது, இஷான் கிஷனை இன்றைய தினம் மிகவும் அதிகபட்ச தொகையான 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன் மூலமாக, நடப்பு ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

அதாவது, முதலில் சில அணிகள் இசான் கிஷனை எடுக்க போட்டிப் போட்ட நிலையில், ஏலத் தொகை அதிகமானதால் பல அணிகளும் ஓரம் கட்டின. ஆனால், மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் அணிகள் மட்டும் அவரை விடுவதாக இல்லை. இதனால், காவ்யா - நீட்டா அம்பானி இடையே கடும் போட்டி நிலவியது.

அப்போது, இஷான் கிஷானின் விலை 15 கோடியையும் தாண்டிச் சென்ற நிலையில், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியே இஷானை 16.25 கோடி ரூபாயக்கு ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக்கொண்டது.

- இந்திய பந்துவீச்சாளர் தீபக்  சாஹரை, 14 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

- இந்திய வீரர் அம்பதி ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டார்.

- இந்திய வீரர் நிதிஷ் ராணாவை, 8 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஏலத்தில் எடுத்தது.

- இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேலை 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

- இந்திய வீரர் தீபக் ஹூடாவை 5.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஏலத்தில் எடுத்தது.

- இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4.20 கோடி ரூபாய்க்கு சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

- மும்பை அணியின் ஆல் ரவுண்டர் குர்னல் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

வெளிநாட்டு வீரர்கள்

- இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

- ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடள்ஸ் அணியால் ஏலத்தல் எடுக்கப்பட்டார்.

- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையரை 8.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹொல்டரை, 8.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக ஜொலித்த ஜோஷ் ஹேசல்வுட்டை,  7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

 - இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்யை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலம் எடுத்தது.