மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களுருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் மாபெரும் ஐபிஎல் திருவிழா தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகபோத்திய ஆதரவைப் பெற்று உள்ள ஐபிஎல் டி20 தொடரின 15 வது சீசன், அடுத்த மாதம் மார்ச் இறுதியில் நடைபெற உள்ளது.

இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளன. இதனால், மொத்தம் 10 அணிகளுக்கு இன்றைய தினம் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக பிரபல இந்திய வீரரான ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டார்.

- ஷிகர் தவானை 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- தமிழக வீரரும் பிரபலன சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினை, 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை, 7.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை,  9.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி, ஏலம் எடுத்தது.
 
- நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 8 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.

- இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், 12.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கி உள்ளது.

- இந்திய வீரர் முகமது ஷமியை, 6.25 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- சென்னை அணியின் நட்சத்திரமாகவும், முக்கிய வீரராகவும் திகழ்ந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூ ப்ளசிஸை, 7 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

- தென்னாப்பிரிக்க அணி வீரர் குவிண்டன் டி காக் 6.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஏலத்தில் எடுத்து உள்ளது.

- ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், 6.25 கோடி ரூபாயக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி, ஏலம் எடுத்தது.

- தேவ்தத் படிக்கல்லை, 7.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலம் எடுத்தது.

- இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை 4.6 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது.

- வெஸ்ட் இண்டீஸ்ன் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், 8.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜையண்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

- இந்திய வீரர் நிதீஷ் ராணா 8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

- முக்கியமாக, இந்திய வீரர் ராபின் உத்தப்பா 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மீண்டும் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.

- குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ, 4.40 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ராபின் உத்தப்பா, பிராவோ ஆகிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், தற்போதைய ஐபிஎல் மெகா ஏலத்தில் மீண்டும் தக்கவைக்கப்பட்டு உள்ளதால், சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் “சின்ன தல” என்று, செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.