தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை துஷாரா விஜயன் போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.

குத்துச்சண்டை வீரராக நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து இந்த ஆண்டு நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான அன்புள்ள கில்லி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனிடையே நடிகை துஷாரா விஜயனின் புதிய மியூசிக் வீடியோ இன்று பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியானது. செங்காந்தள் பெண்ணே எனும் இந்த மியூசிக் வீடியோவில் துஷாரா விஜயன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் இணைந்து நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் கணேசன் தயாரித்த இப்பாடலை வேல் சிக்னேச்சர் வெளியிட்டது.

இயக்குனர் தக்ஷனா குமார் இயக்கத்தில் உருவான செங்காந்தல் பெண்ணே பாடலை அமுதவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் வேத்ஷங்கர் சுகவனம் இசையமைப்பில் உருவான செங்காந்தல் பெண்ணே பாடல் சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலக்கலான இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.