தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் இந்தியத் திரையுலகில் பல கோடி ரசிகர்களின் அபிமானமான ஹீரோவாக திகழ்கிறார். கடைசியாக அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பின்க் துரை படத்தின் தமிழ் ரீமேக்காக தயாரான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குனர் H.வினோத் இயக்கினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை.

காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை திரைப்படத்திற்கு  திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வலிமை திரைப்படம் ரிலீசாக உள்ளது.

வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வலிமையை திரைப்படத்திலிருந்து பிரத்தியேகமான புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கீழே உள்ள லிங்கில் அஜித்குமாரின் மாஸ்ஸான வலிமை படத்தின் புதிய புகைப்படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.