கோவை தெற்கு எனக்கு முக்கிய விலாசமாக மாறியுள்ளது. இனி உங்கள் முகமாக இந்தியா முழுவதும் தெரிய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். 

மேலும் அவர் பேசியது, ‘’ மக்கள் நீதி மய்யத்திற்கு சாதி, மத பேதம் கிடையாது.  கோவையில் மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

ஒரு அரசை வைப்பதும் நீக்குவதும் உங்கள் முடிவாக இருக்க வேண்டும். எங்கள் ஒட்டு விற்பனைக்கு இல்லை என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். யாரும் விலைக்கு வாங்கக் கூடாது. 5 வருடத்திற்கான கூலி வெறும் 5 ஆயிரம் கிடையாது.  

நாங்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும், முந்திக்கொண்டு இரண்டு கட்சிகளும் காப்பி அடிக்கிறார்கள். குறிப்பா பெண்களுக்கான எங்களின் திட்டங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் காப்பியடிக்கின்றன.

தேர்தலில் வெற்றி பெறும் எங்களின் அனைத்து எம்.எல்.ஏகளும் செய்த திட்டங்களை பாண்டு பத்திரத்தில் பட்டியல் போட்டுக் கொடுப்பார்கள், தகவல் அறியும் சட்டத்தில் அதை தெரிந்து கொள்ளலாம் எனவும், இனி உங்களுக்கு பணி செய்வதுதான் என் வாழ் நாள் வேலை ” என்று தெரிவித்தார்.