தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு நீரிழிவு நோய் பிரச்னை காரணமாக, அவரது கால் விரல் அகற்றப்பட்டுள்ளது, அக்கட்சினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியம் நடத்தியவர் கேப்டன் விஜயகாந்த்!

எனினும், கேப்டன் விஜயகாந் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பெரும்பாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கிய இருந்து, கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனாலும், உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக பொது வெளியில் வராமல் தவிர்த்து வருகிறார். ஆனால், அவ்வப்போது மட்டும் அவரது உடல் நிலை குறித்த தகவல்கள் வெளி வந்தனம் வண்ணம் உள்ளன. 

அத்துடன்,  விஜயகாந்த் உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையிலேயே, அவர் கடந்த காலங்களில் வாக்களிக்ககூட வருவதில்லை என்கிற தகவலும் முன்வைக்கப்பட்டு வந்தன.

இப்படியாக, உடல் நலக்குறைவு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து சற்றே ஒதுங்கிய கேப்டன் விஜயகாந்து இருந்து வந்த நிலையில், கட்சி பணிகளை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வந்தார்.

முக்கியமாக, எப்போதும் கம்பீரமான தோற்றத்துடன் காண்டப்படும் விஜயகாந்த், சமீபத்தில் வெளியான ஒரு ஒரு புகைப்படத்தில் சற்றே மெலிந்த உடல் வாகுடன் அவர் காணப்பட்ட புகைப்படம் வெளியாகி, பெரும் வைரலானது. 

இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்களும், அவரது கட்சித் தொண்டர்களும் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்தனர்.

எனினும், கேப்டன் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், ஓரிரு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவதும் செய்திகளாக தொடர்ந்து வெளிவந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி விஜயகாந்த், வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் இன்னும் மோசமடைந்த நிலையில், விஜயகாந்திற்கு, அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நீரிழிவு பிரச்னையால் கால் விரல் அகற்றப்பட்டு உள்ளதாக” தேமுதிக சார்பில் அக்கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து தேமுதி தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட வருடமாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக, அவரது காலில் உள்ள விரல்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர் என்றும், அதன் பேரிலேயே நேற்று இரவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “அறுவை சிகிச்சை காரணமாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார் என்றும், தற்போது அவர் நலமாக  இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “விஜயகாந்த் விரைவில்  பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்” என்று, அவரது கட்சித் தொண்டர்களும், அவரது ரசிகர்களும்   பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.