தமிழகத்தின் முன்னணி ரேடியோ ஜாக்கியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த RJ.பாலாஜி தற்போது தமிழ் திரையுலகில் நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் RJ.பாலாஜி இயக்கி நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

ஜீ ஸ்டுடியோஸ் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, RJ.பாலாஜி-NJ.சரவணன் இணைந்து இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஊர்வசி, சத்தியராஜ், லலிதா, அபர்ணா பாலமுரளி, புகழ், யோகிபாபு, ஷிவானி நாராயணன், பவித்ரா லோகேஷ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வீட்ல விசேஷம் திரைப்படம் தயாராகியுள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் RJ.பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த கலகலப்பான ப்ளூப்பர் சம்பவங்களின் காட்சிகள் நிறைந்த புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. வீட்ல விசேஷம் திரைப்படத்தின் கலகலப்பான அந்த மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.