தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக்செல்வன் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து பலவிதமான கதைளங்களிலும் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

முன்னதாக இந்த ஆண்டில் (2022) சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் என அசோக்செல்வன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றன. அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாஷம்) திரைப்படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் சந்தீப் சியாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள வேழம் திரைப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. வேழம் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

K 4 KREATIONS தயாரிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வேழம் திரைப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வேழம் திரைப்படத்திலிருந்து தூரம் வீடியோ பாடல் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் தூரம் வீடியோ பாடல் இதோ…