விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மலேசிய வாழ் தமிழரும் பிரபலமான சுயாதீன இசைக் கலைஞருமான முகேன் ராவ், தொடர்ந்து வேலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார்.

தொடர்ந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் முகேன் ராவ் அடுத்ததாக இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள MY3 வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்திருக்கும் MY3 விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளது. 

இந்த வரிசையில் அடுத்ததாக வெப்பம் திரைப்படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் மதில் மேல் காதல் திரைப்படத்தில் முகென் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, சுப்பு பஞ்சு, KPY பாலா, பாண்டிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ரொமான்டிக்கான காதல் படமாக ஷீரடி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள மதில் மேல் காதல் படத்திற்கு கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், மதில் மேல் காதல் திரைப்படத்தில் இருந்து வலியே வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. எமோஷனலான அந்த வீடியோ பாடல் இதோ…