தமிழகத்தின் முன்னணி நட்சத்திர நாயகியாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள O2 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதனையடுத்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகமாகும் நயன்தாரா, தொடர்ந்து லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படத்திலும், தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

முன்னதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படமாக்கப்பட்டு விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி சென்று வந்த நிலையில், தற்போது இருவரும் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)