தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் கமர்சியல் இயக்குனராகவும் தொடர்ந்து என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டரான சந்திரமுகி திரைப்படத்தின் 2வது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.  ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#Rudhran First Look on June 23rd 🔥🔥#ருத்ரன் #రుద్రుడు #ನಮ್ಮರುದ್ರ #രുദ്രൻ #रुधन@offl_Lawrence @realsarathkumar @gvprakash @priya_Bshankar @RDRajasekar #PoornimaBhagyaraj @kaaliactor @editoranthony @5starcreationss @teamaimpr pic.twitter.com/NgSCKTJvQ8

— S Kathiresan (@kathiresan_offl) June 21, 2022